எனது நூலுக்கு விருது

xavier11

கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்த எனது “இயேசு என்றொரு மனிதர் இருந்தார் “ எனும் நூலை கடந்த ஆண்டின் சிறந்த நூலாக “தென்னிந்தியத் திருச்சபையின் கிறிஸ்தவ தமிழ் இலக்கியப் பேரவை மற்றும் தமிழிசைப்பள்ளி அமைப்பினர் “ தேர்வு செய்து விருது வழங்கினார்கள்.

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை அன்றைய சமூக அரசியல் கலாச்சாரப் பின்னணியில் விவிலிய மொழிக்கு வெளியே விரிவாய் சொன்ன நூல் இது என பல்வேறு தரப்பினரும் மனம் திறந்து பாராட்டியது மனதுக்கு நிறைவளித்தது.

இந்த நூலை எழுதுவதும் ஒரு சவாலான விஷயமாகவே இருந்தது. பைபிளில் இயேசுவின் வாழ்க்கையை நான்கு நற்செய்தியாளர்கள் எழுதியுள்ளனர். ஆனால் அவற்றில் வெளிப்படையான ஆண்டுக் குறிப்புகள் ஏதும் இல்லை.

இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு இவற்றைத் தவிர்த்து நற்செய்தியாளர்கள் பல்வேறு செய்திகளை அவர்களுடைய விருப்பப்படி சொல்கின்றனர்.  இந்த செய்திகளின் தொகுப்பில் எந்த வரிசைப்படி எவை வருகிறது என்பதை கண்டுபிடிக்கவே பெரும்பாலான நேரம் செலவானது. பல்வேறு இறையியல் நண்பர்கள், நூல்கள், ஆன்மீக வழிகாட்டிகள் என பலருடைய உதவியே இந்த நூலின் செய்திகளை கால வரிசைப்படி தொகுக்க பெரிதும் உதவியது.

இந்த நூல், இயேசுவின் வாழ்க்கையைத் தெரிந்த பலருக்கும் கூட சில புதிய தகவல்களைச் சொன்னது எனுமளவில் நிறைவு தந்தது.

நூலுக்குக் கிடைத்த அங்கீகாரம் மனதுக்கு ஆனந்தமளிக்கிறது. இந்த நேரத்தில் நூலை வெளியிட்ட கிழக்குப் பதிப்பகத்துக்கும், நண்பர்கள் பா.ரா, பத்ரி, சொக்கன் ஆகியோருக்கும், உதவிய மற்ற அனைத்து நபர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்வது அதை விட அதிகமாய் ஆனந்தமளிக்கிறது.

37 comments on “எனது நூலுக்கு விருது

  1. மிக்க நன்றி தோழி ஷாமா.. உங்களைப் போன்றவர்களின் வாழ்த்துக்கள் கிடைப்பதை வரமாய் கருதுகிறேன் 🙂

    Like

  2. Congradutation Xavier!
    உங்கள் நூலுக்குக் கிடைத்த அங்கீகாரமும்,
    நீங்கள் பெற்ற விருதும்
    உங்களுக்கு மட்டுமல்ல,
    உங்கள் வாசகியாகிவிட்ட எனக்கும்
    ஆனந்தமளிக்கிறது.
    இன்னும் பல விருதுகள் பெற வாழ்துகிறேன்!
    May God bless you.

    Like

  3. hi

    in search i got this website
    due to not availability of tamil fonts
    i unable to read the contents property
    pl let me know which font u r using in this
    if pos pl send me the fonts so that i can enjoy ur posts
    thanks
    shiva

    Like

  4. இனிய நண்பருக்கு

    விருது பெற்ற இனிய எழுத்தாளருக்கு,

    இயேசுவின்பால் கொண்ட நெகிழ்ந்த anpai வரலாறை உங்கள் சிந்தனையில் சிறகு விரித்து நூலாக்கி வெளியிட்டமைக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியான விஷயம் இதைப்போல இன்னும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துகிறேன்

    Like

  5. வாழ்த்துகள் அண்ணா….
    இன்னும் அநேக விருதுகள் பெறுவதற்கு….

    Like

  6. பாராட்டுக்கள் சேவியர் அவர்களே….

    மஹாலக்ஷ்மி

    Like

  7. அண்ணா,உங்கள் நிறைவான எழுத்துக்கு இன்னும் இன்னும் விருதுகள் கிடைக்கும்.மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    Like

  8. வாழ்த்துகள் சேவியர் – அடுத்தடுத்து வரப்போகும் விருதுகளுக்கும் சேர்த்து!

    என். சொக்கன்,
    பெங்களூர்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.