சுஜாதா ரசித்த கவிதை

( பிரியத்துக்கும் பிரமிப்புக்கும் உரிய எழுத்தாளர் சுஜாதா நினைவாக ) 

 வரவேற்பாளர்

 reception1.jpg

ஆடைகளில் சுருக்கம் விழாமல்,
உதடுகளின் சாயம்
உருகி வழியாமல்,
அலங்காரப் பதுமையாய்
வரவேற்பறையில் நான்.

தொலைபேசிச் சத்தம்
கேட்டுக் கேட்டு என்
காது மடல்கள் ஊமையாகிவிட்டன

போலியாய் சிரிப்பதற்காகவே
எனக்கு
ஊதிய உயர்வு
அவ்வப்போது வருகிறது.

கண்களில் கொஞ்சம்
காமம் கலந்தே
பாதி கண்கள் என்னைப் பார்க்கின்றன.
மீதி கண்கள்
அவசர யுகத்தின் பிரதிநிதிகள்
கடிகாரம் மட்டுமே பார்த்து வாழ்பவர்கள்.

என் குரலுக்குள்
குயில் இருக்கிறதாம் !
எனக்கு இருப்பவை தோகைகளாம் !
வர்ணனை வார்த்தைகளிலும்
புன்னகை மட்டுமே பூக்க வேண்டுமென்னும்
கட்டாயக் கட்டுகளில் நான்.

எனது சின்ன வயது மகள்
மாலையில் மறக்காமல்
மல்லிகை வாங்கி வரச் சொன்னாள்.

பூக்களின் வாசனைகளுக்கிடையே
என்
சராசரி வாழ்க்கையின் எதார்த்தம்
நாசி யை எட்டும் போது
முந்திக் கொண்டு தட்டுகிறது
மீண்டும் அந்த தொலைபேசி.

விரைவாய் மதிய உணவு முடித்து
கிடைக்கும் இடைவேளையில்
சிறிதே இளைப்பாறி
மீண்டும் உதடுகளில் புன்னகை நட்டு
முன்னறை வாசலில் தஞ்சம்.

அமிலச் சாலையில் கழுவப்பட்டு
மொத்த மனசும்
சாயம் போனதாய்த் தோன்றும்,
ஒவ்வொரு
மாலைப் பொழுதுகளிலும்.

சிரித்து வாழவேண்டும் என்று
கவிஞன் சொன்னது என்னிடம் தானோ ?
சிந்தனைகள் விட்டு விட்டு
வட்டமிட
கவலையாய் இருக்கிறது இப்போது.

மூன்று மணிக்கு பேசுகிறேன்
காலையில் கண்வலியுடன்
கணவன் சொன்னான்.
கடிகாரம் இலக்கைத் தொட்டபின்னும்
பயணத்தைத் தொடர,
இதுவரை ஒலித்த தொலைபேசி
இப்போது மட்டும் ஊமையாய் !
0

சுஜாதா அவர்களின் புது நானூறு பகுதியில் இடம் பெற்ற எனது கவிதை

135 comments on “சுஜாதா ரசித்த கவிதை

 1. /கண்களில் கொஞ்சம்
  காமம் கலந்தே
  பாதி கண்கள் என்னைப் பார்க்கின்றன.
  மீதி கண்கள்
  அவசர யுகத்தின் பிரதிநிதிகள்
  கடிகாரம் மட்டுமே பார்த்து வாழ்பவர்கள்/

  ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை.

 2. ஜவுளிக் கடை பொம்மையாக மட்டுமே பலரால் பார்க்கப்படும் வரவேற்பாளர் வேலை செய்யும் பெண்களின் உள்மனங்களில் உறைந்து கிடக்கும் வேதனைப் படிமங்களை, கொஞ்சமும் சிதையாமல் மிக ஆழமாக பதிவு செய்து உள்ளீர்கள் .

  கண்களில் கொஞ்சம்
  காமம் கலந்தே
  பாதி கண்கள் என்னைப் பார்க்கின்றன.
  மீதி கண்கள்
  அவசர யுகத்தின் பிரதிநிதிகள்
  கடிகாரம் மட்டுமே பார்த்து வாழ்பவர்கள்.

  பார்வை ஈக்களால் மொய்க்கப்படும் தேகப் பலாப்பழமாய் தான் ஆகிப் போனதை வெம்பிய நெஞ்சுடன் உணர்த்துகிறாள்.
  தான் நொண்டியடித்து நகர்ந்தாலும் , கடிகார வினாடி முள் நம்மை ஓட்ட பந்தய வீரர்களாய் முண்டியடிக்க வைத்து கொண்டிருப்பதை மிக அழகாக படம் பிடித்துள்ளீர்கள் !!

  அமிலச் சாலையில் கழுவப்பட்டு
  மொத்த மனசும்
  சாயம் போனதாய்த் தோன்றும்,
  ஒவ்வொரு
  மாலைப் பொழுதுகளிலும்

  “அமிலச் சாலை ” என்ற சொற்பயன்பாட்டினால் நவீனத்துவம் மிளிர்கிறது. வரிகளின் கருத்தால், வாசிக்கையில் சோகம் இழையோடிய பின்னணி இசை உணர்வு நரம்புகளுக்குள் எதார்த்தமாய் ஊடுருவல் செய்கிறது .

  மூன்று மணிக்கு பேசுகிறேன்
  காலையில் கண்வலியுடன்
  கணவன் சொன்னான்.
  கடிகாரம் இலக்கைத் தொட்டபின்னும்
  பயணத்தைத் தொடர,
  இதுவரை ஒலித்த தொலைபேசி
  இப்போது மட்டும் ஊமையாய் !

  ஆறுதல் மருந்து எதிர்பார்த்துக் கிடக்கும் பெண்ணுக்கு , சொந்தக் கணவனாலேயே அரிவாள் வீச்சு வார்த்தைகள் விழுவது பரிதாபத்திற்கு உரியதாய் உள்ளது.
  மிக மிக அருமையான கவிதை சேவியர்!!!!!!!!!!!!!

  வாழ்த்துக்கள் சேவியர்!!!!!!!!!!!!!

  அன்புடன்
  குகன்

 3. அன்பின் குகன். மிக விரிவாக ஆழமாக கவிதை நடையில் விமர்சனம் செய்திருக்கிறீர்கள் மனமார்ந்த நன்றி. அமிலச் சாலை – யைக் குறிப்பிட்டுப் பேசுவதிலேயே உங்கள் கவிதை ரசனை புரிகிறது.

  கருத்து சொல்லவே சோம்பல் படாமல், மிக மிக விரிவாக உங்கள் கருத்தைச் சொல்லியமைக்கு நன்றிகள் பல..

 4. க‌விதையை மிக‌வும் ர‌சித்தேன். பாராட்டுக்க‌ள்!
  > கிரிஜா ம‌ணாள‌ன், திருச்சிராப்ப‌ள்ளி. த‌மிழ‌க‌ம்.

 5. உதட்டு சாயம் உருகி வழியுமா? அது என்ன மெழுகுவர்த்தியா ஐஸ்கிரீமா? தினத்தந்தி கட்டுரை போல ஒரு அறிக்கையை எழுதிவிட்டு செத்தவர் பேரைச் சொல்லி விற்கிறீர்கள்.

 6. வருகைக்கு நன்றி பெயர் !. வெளிப்படையாய் உங்கள் கருத்துக்களைச் சொன்னமைக்கும் நன்றிகள் பல.

 7. ‘அமிலச் சாலை’ – இதுபோல சுஜாதா சாரைத்தவிர வேற யார் எழுதியும் இதுவரைக்கும் நான் படிச்சதில்லை. எனக்கு அவர் வானவூர்தியை அதாங்க ஏரோப்ளேன் அதை ‘தகதகத்த அலுமினியப் பறவை’ அப்படின்னு எங்கயோ ஏதோ ஒரு கதையில குறிப்பிட்டிருக்கார்.. அது இன்னும் மனசுல ஒட்டிக்கிட்டிருக்கு.. அதே போல இந்த ‘அமிலச் சாலை’

  ஆனா முதல்ல புரியலை ‘அமிலச் சாலை’ ன்னதும் நான் roadஐ கற்பனை செய்துட்டேன்.. அதனால அடுத்த வரிகள் புரிய இன்னும் இரண்டு முறை படிக்க வேண்டி இருந்தது…

  “கடிகாரம் இலக்கைத் தொட்டபின்னும்
  பயணத்தைத் தொடர,” இதை ரொம்ப இரசிச்சேங்க..

  “இதுவரை ஒலித்த தொலைபேசி
  இப்போது மட்டும் ஊமையாய் ” அது அப்படித்தான். ஆனா உண்மை.

  இரசித்தேன்
  கீதா

 8. மனமார்ந்த நன்றிகள் கீதா. வருகைக்கும் உங்கள் விரிவான கருத்துக்கும்.

  மீண்டும் மீண்டும் வருகை தர அன்புடன் அழைக்கிறேன்.

 9. //மீண்டும் உதடுகளில் புன்னகை நட்டு
  முன்னறை வாசலில் தஞ்சம்.//

  சேவியர்,

  “புன்னகை நட்டு” என்பதிலேய புன்னகை கூட நமக்காக இல்லை என்று தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்

  உக்காந்து யோசிப்பீங்களோ?அற்புதம்!!!

  முகுந்தன்

 10. Nice poem.
  இயந்திரத்தனமான காரியதரிசி வேலையின் பின்னால் உள்ள வேதனையை அற்புதமாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

 11. //“புன்னகை நட்டு” என்பதிலேய புன்னகை கூட நமக்காக இல்லை என்று தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்

  //

  நன்றி முகுந்தன். நல்ல கவித்துவமான பார்வையோடு கவிதையை அணுகியமை கண்டு மெத்த மகிழ்ச்சி🙂 உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

 12. //Nice poem.
  இயந்திரத்தனமான காரியதரிசி வேலையின் பின்னால் உள்ள வேதனையை அற்புதமாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.//

  நன்றி முன்னா🙂

 13. நல்ல கவிதை. மற்றவர் வலியை, உங்கள் கூர்மையான பார்வையால், எளிதில் எழுத முடிகிறது. வாழ்த்துக்கள்.

  அனுஜன்யா

 14. //I like it very much, because I am receptionist//

  வாவ்.. பிரியா உங்கள் பாராட்டு தான் இந்தக் கவிதையை பெருமைப்படுத்துகிறது ! நன்றி !

 15. nangu nalla varthai kalal ungalai nan paratta enniyum , ennal mudiyavillai , ungalai paratta varthaikale illai

 16. போலியாய் சிரிப்பதற்காகவே
  எனக்கு
  ஊதிய உயர்வு
  அவ்வப்போது வருகிறது.

  இரசித்தேன்,நன்றி

 17. அருமையான வரிகள்…

  இன்றைய அவசர வாழ்கையில் பொருட் தேவைக்காக வேலைக்கு செல்லும் வரவேற்பறை பணியாளினிகளின் என்ன ஓட்டத்தை படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.

  ***
  போலியாய் சிரிப்பதற்காகவே
  எனக்கு
  ஊதிய உயர்வு
  அவ்வப்போது வருகிறது.
  ***
  மிகவும் ரசித்த வரிகள்…

  உங்களுக்கு எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

  அன்புடன்
  மகாலக்ஷ்மி.

 18. சேவியர் இத்தனை நாட்களை கடத்திவிட்டேனே என்று சொல்ல வைக்கின்றன உங்கள் ஒவ்வொரு படைப்புகளும்… உங்கள் முகத்தை பார்த்தா என்னுடன் பி.டெக் படித்த சினிமா இயக்குனர் சுசிகணேசன் ஞாபகம் தான் வருகின்றது. ஆனால் சுசிகணேசனுக்கு கந்தசாமி முடிக்கவே நேரம் இல்லாமல் இருக்கின்றாரே.. என்ற சிந்தனையில் அவராக இருக்கமுடியாது என்று நினைத்துக்கொள்வேன். அன்புடன் இளங்கோவன்

 19. புன்னகை மட்டுமே பூக்க வேண்டுமென்னும்
  கட்டாயக் கட்டுகளில் நான்.
  ennai thotdu vittathu

 20. Dear Friends…..

  Seviyar ku anupiya vaalthukaluku nanri pookal 1000
  Nanba Seviya Mega Hit kavithai padaipuku valthu pookal 10001………
  NK.PAZHANIMANI
  Trichy

 21. migavum auputhamaga engalin ottumotha thuyarangalayum thiraiyittu kattiyatharku mikka nanri. (Naanum oru varaverparai bommaithan).

 22. /There is a small pain in the heart after reading this Kavithai! Vaazhkai-ah?//
  நன்றி சகுந்தலா…🙂 மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் பாராட்டு !

 23. எப்படி நண்பரே உங்களால் மட்டும் நிஜங்களின் நிழல்களை வார்த்தைப்படுத்த முடிகிறது…..

  உங்களின் வார்த்தைக்கோர்ப்பு இருக்கிறதே….

  அது இறைவனின் வரம்…..

  உங்க‌ளின் க‌விதைக‌ள் வ‌லிக்க‌ வைக்கிற‌து….

  தொட‌ர்க‌…..

 24. //உங்களின் வார்த்தைக்கோர்ப்பு இருக்கிறதே….

  அது இறைவனின் வரம்…..

  உங்க‌ளின் க‌விதைக‌ள் வ‌லிக்க‌ வைக்கிற‌து….

  தொட‌ர்க‌…..

  //

  மிக்க நன்றி அம்ஜத். மனம் திறந்த பாராட்டுகளுக்கு !🙂

 25. Enudaya kavidi payanangil mudal athiyaayam indha kavidai.

  Migavum arpudamaaga vaarthaigalai korthu unarchigalai thatti elupiyirukireergal..

  Enuudaya manamaarnda paarattukal.

 26. /Enudaya kavidi payanangil mudal athiyaayam indha kavidai.

  Migavum arpudamaaga vaarthaigalai korthu unarchigalai thatti elupiyirukireergal..

  Enuudaya manamaarnda paarattukal.
  //

  மிக்க நன்றி குரு🙂

 27. ANRAVAL SONNA VAARATHAI , ARIVINIL MELAA JI YAAKA, NINRIDU NAALEE ANRU, NINAITHIDU NAALEE ANROO, NEERIDU NAADKAL SELLA, SENRATHU THUYARAM ENRU, NINATHIDAA THUYARAM MARAPPAAL, ENPATHU THAANEENTHAN THIIIRIPPU. “THII IRPU” -K.SIVA-(Fr)

 28. நான் காவியம் எழுதும் புலவன். பத்தாயிரம் மரபுக்கவிதைகளை ஏழு காவியங்களோடு எழுதியிருக்கின்றேன். இருந்துமென்ன இதயத்தைத்தொடும் உன்வரிகள் என் இலக்கியத்தை ஏளனம் செய்வதுபோல் இருந்தன மகளே. உனக்கு என் வாழ்த்துக்கள்
  ”ஜின்னாஹ்” இலங்கை

 29. நான் காவியம் எழுதும் புலவன். பத்தாயிரம் மரபுக்கவிதைகளை ஏழு காவியங்களோடு எழுதியிருக்கின்றேன். இருந்துமென்ன இதயத்தைத்தொடும் உன்வரிகள் என் இலக்கியத்தை ஏளனம் செய்வதுபோல் இருந்தன மகனே உனக்கு என் வாழ்த்துக்கள்
  ”ஜின்னாஹ்” இலங்கை

 30. //நான் காவியம் எழுதும் புலவன். பத்தாயிரம் மரபுக்கவிதைகளை ஏழு காவியங்களோடு எழுதியிருக்கின்றேன். இருந்துமென்ன இதயத்தைத்தொடும் உன்வரிகள் என் இலக்கியத்தை ஏளனம் செய்வதுபோல் இருந்தன மகனே உனக்கு என் வாழ்த்துக்கள்
  ”ஜின்னாஹ்” இலங்கை//

  நன்றி ஐயா… மனம் திறந்த பாராட்டுக்கு…

 31. oru oru varikalaiyum rasithen enakku konajam training kodunga please …ithai pol siriyathaai ethavathu padaikka …..

 32. அருமையாக எழுதுகிறீர்கள் . இதை படிக்கும் போது நான் எழுதிய கவிதை வரிகள் நினைவிற்கு வருகிறது..

  பெண்கள் உதட்டிற்கு மட்டும் தான் நிறம் பூசு கிறார்கள் , அனால் ஆண்களோ மனதிற்கும் அல்லவே பூசி அலைகிறார்கள் …..

 33. நட்பினைப்பற்றிய தெடல்களில் கிடைத்த வைரத்தினுக்கு வாழ்த்துக்கள்.
  வரவேற்பாளினியை சகோதரியாக பார்க்காத மூடர்களுக்கு நல்ல சவுக்கடி.தங்கள் பணியினை நேரத்தினை சேமிக்கும் மாந்தர்களின் மனதினை படித்து எங்களையும் பிடிக்க வைத்த உங்களுக்கு நன்றி!

 34. naan BA tamil padithullean,Ennal unaramudikirathu vaarthaiyin aazhathai.
  Enna Arumaiyana amaippu,,

  என் குரலுக்குள்
  குயில் இருக்கிறதாம் !
  எனக்கு இருப்பவை தோகைகளாம் !
  வர்ணனை வார்த்தைகளிலும்
  புன்னகை மட்டுமே பூக்க வேண்டுமென்னும்
  கட்டாயக் கட்டுகளில் நான்.

 35. நீ தான் என்று
  உன்னையை முடிவுசெய்தேன்
  அவன் தான் என்று
  உறவுகள் முடிவுசெய்கின்றன
  நான் என்ன செய்வது…

 36. enaku kavithayellam ezhutha theriyathu, aana unga kavithaya padicha piragu enakum kavithai ezhutha aasaya iruku,,,,,,,,, REALLY FANTASTIC, romba romba romba romba romba romba pidichiruku

 37. Dear son (because I am an old man of 62 age )your words are so sharp that a lady of selling style the feeling in her.But generally what is happened today is to see view the physical body only not BEHIND that of their inner feelings in their hearts.I read once upon a time the words from Dr.M.S.Uthaya murthy who said that many are working only for their family.The same view was written in a Tamil film by Kaviperarasu Kannadasan as ELLAME VAITHUKKA THANDA. But this is not the new one even in the agriculture world in rural areas we heard.As many new young poets who have also given fine words of representation, your lines are just pinned and penned as an ironic one Vazhka Valamudan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s