பாம்பட நினைவுகள்

paatti.jpg

பாட்டி
இருமி இருமியே இறந்த
நினைவுகள்
கொஞ்சம் கொஞ்சமாய்
மறைந்து வருகின்றன.

ஆனால்,
ஒப்பாரிகளோடு ஓடி வந்த
சொந்தம்,
பாட்டியின்
பாம்படத்து எடை குறைந்திருப்பதாய்
வீட்டுக் கொல்லையில் நின்று
விசும்பாமல்
பேசியது மட்டும்
மறையவே இல்லை இன்னும்.
 

4 comments on “பாம்பட நினைவுகள்

  1. விளக்கத்திற்கு நன்றி , சேவியர் !!!

    ” தண்டட்டி கருப்பாயி
    தாழையத்தூர் மருதாயி ”

    என்று “காதல்” திரைப்பட பாடலில் வரும் தண்டட்டி தான் பாம்படம் என்று புரிந்து கொண்டேன் .

    அன்புடன்
    குகன்

    Like

  2. அன்பின் குகன், பாம்படம் என்பது வயதான பாட்டிகள் காதில் போடும் நகை. ரொம்பப் பெரியதாய் சின்னச் சின்ன பாகங்கள் ஒன்றிணைத்து ஒரு பெரிய பந்து போல போட்டிருப்பார்கள். அதன் பாகங்களை பிரித்துப் பிரித்து எடுக்க முடியும். அழகான சமாச்சாரம் ! இனி அவற்றையெல்லாம் பார்க்க முடியுமா தெரியவில்லை

    Like

  3. சேவியர்,
    பாம்படத்து எடை என்றால் என்ன ?
    விளக்கினால் நன்று.

    அன்புடன்
    குகன்

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.