கவிதை : சொல்ல மறந்த கவிதை

வெள்ளைப் புன்னகையால்
என் மனதில்
கனவுகளின் நிறம் ஊற்றிய
சின்னப் புறாவே.

புன்னகை மின்னலால்
என்
இதய வானத்தில்
வெள்ளை வேரிறக்கியவள்
நீ.

இதயத்தின் ஒருபாகம்
இருண்டு தான் கிடந்தது
உன்
வெள்ளிக் கொலுசுகளின்
வெள்ளை மணிகள் தான்
அதை
துலக்கிவைத்துப் போயின.

தரை மோதும் முன்
முகம் மோதும்
ஓர்
பனித்துகளின் மென்மை
உன் புன்னகையில்.

நிறம் மாறா
அடர் வெண்
மேகத்தின் மென்மை
உன் கன்னங்களில்.

கவலைக் குவியலில்
கூட
வெள்ளைப் பூக்களை
விளைவிக்க
உன்னால் எப்படி முடிகிறது ?.

என்
கருப்பு இரவுகளில்
தினம் தினம்
பௌர்ணமியாய் உலவ
உன்னால் மட்டுமே முடிகிறது.

உன் கண்களில்
தூண்டில்கள் இல்லை,
ஆனாலும்
மாட்டிக் கொள்ளவே
மீண்டும் மீண்டும் முயல்கிறேன்.

உச்சந்தலையில்
ஒற்றை விரல் கோடிழுத்து
மூக்கு வரை
வரும்போதே
நான்
மூச்சிழந்து போகின்றேன்.
உதடுகளைத்
தீண்டும் வரை
உயிர் வாழ விழைகின்றேன்.

கனவுகள் அகல,
விரல்கள் விலக
வெயில் வந்து தாக்குகையில்
சுள்ளெனச் சுடுகிறது
சொல்லாத காதல்.

வருகிறது
காதலர் தினம்.
அப்போதேனும் சொல்வேனா ?
இல்லை
கனவுகளில் மட்டுமே வெல்வேனா ?

0

12 comments on “கவிதை : சொல்ல மறந்த கவிதை

 1. //தரை மோதும் முன் முகம் மோதும் ஓர்
  பனித்துகளின் மென்மை உன் புன்னகையில்.//

  //உன் கண்களில் தூண்டில்கள் இல்லை,
  ஆனாலும் மாட்டிக் கொள்ளவே மீண்டும் மீண்டும் முயல்கிறேன்.//

  ஆஹா…. அற்புத வரிகள்…..

  //வருகிறது காதலர் தினம்.
  அப்போதேனும் சொல்வேனா ?
  இல்லை கனவுகளில் மட்டுமே வெல்வேனா ?//

  “சொன்னால்தான் காதலா?” என்பதெல்லாம் சினிமாவுக்கு மட்டும் தான்!… நிஜத்தில்????
  மொத்தத்தில் அழகான கவிதை… வாழ்த்துகள் சேவியர்! 🙂

  Like

 2. /கவலைக் குவியலில் கூட வெள்ளைப் பூக்களை விளைவிக்க
  உன்னால் எப்படி முடிகிறது ?.

  என் கருப்பு இரவுகளில் தினம் தினம் பௌர்ணமியாய் உலவ
  உன்னால் மட்டுமே முடிகிறது.

  வருகிறது காதலர் தினம். அப்போதேனும் சொல்வேனா ? இல்லை
  கனவுகளில் மட்டுமே வெல்வேனா ?/

  Nijamana feelings a iruku. nalla iruku xavier sir

  Like

 3. உன் கண்களில்
  தூண்டில்கள் இல்லை,
  ஆனாலும்
  மாட்டிக் கொள்ளவே
  மீண்டும் மீண்டும் முயல்கிறேன்

  CHANCELESS SIR UNGA KARPANI SUPERB

  Like

 4. கவலைக் குவியலில்
  கூட
  வெள்ளைப் பூக்களை
  விளைவிக்க
  உன்னால் எப்படி முடிகிறது ?.

  உச்சந்தலையில்
  ஒற்றை விரல் கோடிழுத்து
  மூக்கு வரை
  வரும்போதே
  நான்
  மூச்சிழந்து போகின்றேன்.
  உதடுகளைத்
  தீண்டும் வரை
  உயிர் வாழ விழைகின்றna
  GREAT LINES NOT ONLY THAT EVERY LINES R SUPERB

  Like

 5. //கவலைக் குவியலில்
  கூட
  வெள்ளைப் பூக்களை
  விளைவிக்க
  உன்னால் எப்படி முடிகிறது ?.

  உச்சந்தலையில்
  ஒற்றை விரல் கோடிழுத்து
  மூக்கு வரை
  வரும்போதே
  நான்
  மூச்சிழந்து போகின்றேன்.
  உதடுகளைத்
  தீண்டும் வரை
  உயிர் வாழ விழைகின்றna
  GREAT LINES NOT ONLY THAT EVERY LINES R SUPERB
  //

  நன்றி ஷிவா…

  Like

 6. /உன் கண்களில்
  தூண்டில்கள் இல்லை,
  ஆனாலும்
  மாட்டிக் கொள்ளவே
  மீண்டும் மீண்டும் முயல்கிறேன்

  CHANCELESS SIR UNGA KARPANI SUPERB
  //

  நன்றி நண்பரே…

  Like

 7. halo shama aaha anna arumyyana kavithy annum kavithy aalutha vandum ungkal nanpan gilpak g i.p.s oliff you thang you

  Like

 8. halo shama aaha anna arumyyana kavithy annum kavithy aalutha vandum ungkal nanpan gilpak g i.p.s oliff you thang you T.P No:-0772048889,0755069357

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.