கவிதை : கூடா நட்பு

Xavier_kavithai

உன்
ஊசிக்குத்தல்கள்
இணைக்க
என்றே நினைத்திருந்தேன்
நீ
நூல் கோர்க்காமல்
குத்திக் கொண்டிருந்த
சேதி தெரியாமல்.

நீயோ
இன்னும்
குத்திய இடத்திலேயே
குத்திக் கொண்டிருக்கிறாய்
என் கிழிசல்
ஒட்டுப் போடப்படவில்லை.

காயங்களின்
காலங்கள் நீண்டபோது
என்
உறக்கம் கலைத்து
எட்டிப் பார்த்தேன்,
நூல் இல்லா
நிலையும் அறிந்தேன்.

காரணமற்ற காரணங்களுக்காய்
என்
முதுகைக் காட்டிக் கொண்டிருந்த
அறியாமையால்
இன்னும் கொஞ்சம்
கூடிப் போனது
வலி.

நூல் கோர்த்துக் கொள்
இல்லையேல்
கிழிசலோடு எனை
வாழவிடு என்று
அப்போது தான்
முதன் முதலாய் சொன்னேன்.

ஊசிக்குக் காதில்லை
என்கிறாய்
சிரித்துக் கொண்டே.

அப்போதே
என்னை
ஆடை மாற்றவேனும்
அனுமதித்திருக்கலாம்
நீ

0

12 comments on “கவிதை : கூடா நட்பு

  1. அற்புதமான கருத்து அற்புதமான கவிதை வடிவில். தங்கள் கவிதையை திருடி செல்கிறேன்.

    Like

  2. /அன்பின் சேவியர் – நட்பு கூடா நட்பெனப் புரியும் போது காலம் கடந்து விடுகிறது. காதில்லா ஊசியில் நூல் கோர்க்காமல் குத்திக் குத்தி கொடுமைப்படுத்தும் நட்பு வாழவும் விடாமல் ஆடை மாற்றவும் அனுமதிக்காமல் செய்யும் கொடுமை தாங்க இயலாது.

    நல்ல சிந்தனை நன்று சேவியர் நல்வாழ்த்துகள்

    //

    மனம் திறந்த வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 🙂

    Like

  3. அன்பின் சேவியர் – நட்பு கூடா நட்பெனப் புரியும் போது காலம் கடந்து விடுகிறது. காதில்லா ஊசியில் நூல் கோர்க்காமல் குத்திக் குத்தி கொடுமைப்படுத்தும் நட்பு வாழவும் விடாமல் ஆடை மாற்றவும் அனுமதிக்காமல் செய்யும் கொடுமை தாங்க இயலாது.

    நல்ல சிந்தனை நன்று சேவியர் நல்வாழ்த்துகள்

    Like

  4. /மனிதர்கள் அனைவருக்கும் இதுபோல் சில நண்பர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். நாம் அவர்களையும் சமாளித்துதான் ஆக வேண்டும்.//

    நன்றி ஐயா.. வருகைக்கும், கருத்துக்கும்…

    Like

  5. /அன்பில் காயம் ஏற்படும்போது…வலிக்கத்தான் செய்கிறது….
    மனதைப் படைத்து அதில் மென்மை செருகி வைக்கப்பட்டு விட்டதே!

    வணக்கம் சேவியர்……….. வாழ்த்துகள்!

    //

    நன்றி சகோதரி…. 🙂

    Like

  6. அன்பில் காயம் ஏற்படும்போது…வலிக்கத்தான் செய்கிறது….
    மனதைப் படைத்து அதில் மென்மை செருகி வைக்கப்பட்டு விட்டதே!

    வணக்கம் சேவியர்……….. வாழ்த்துகள்!

    Like

  7. மனிதர்கள் அனைவருக்கும் இதுபோல் சில நண்பர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். நாம் அவர்களையும் சமாளித்துதான் ஆக வேண்டும்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.