கவிதை : அறுவை சிகிச்சை


நாளைக்கு அறுவை சிகிச்சை !!!
இருபத்து நான்கு வருட
இருள் வாழ்க்கைக்குப் பின்
விழிப்பாதைக்குள் வழியப் போகுது வெளிச்சம்.

எனைப் பார்த்துக்கொண்டிருந்த பூமியை
முதன் முதலாய்
நான் பார்க்கப் போகிறேன் ..

பார்வை கிடைத்ததும்
முதலில்
அம்மாவைப் பார்க்க வேண்டும்.
பேச்சுக்குள் பரிமாறிக்கொண்ட பாசத்தின்
முக உருவம் காண வேண்டும்.

வீட்டுக்குள் நுழையும் போது
நான் தொட்டுப் பார்க்கும் திண்ணையும்
எனைத் தொட்டுப் பார்க்கும்
அப்பாவையும் பார்க்க வேண்டும்.

இரைச்சல்களில் இழுக்கப்பட்டு
எங்கோ நிற்கும் போது
என்கரம் தீண்டி சாலை கடத்தும்
அந்த அன்னிய முகம் காணவேண்டும்.

என்னை மட்டும் இருள் பள்ளத்தின்
முகம் இல்லா மூலைக்குள்
புதைத்துப் போட்ட
என் கருவிழி காணவேண்டும் .

என் ஒரு முகத்தின்
இரு கண்களையும் இருட்டாக்கிய
அந்த பல முக இறைவனின்
திரு உருவம் தரிசிக்க வேண்டும்.

என் இருட்டுப் பயணத்துக்கு
கதவுகள் கண்டுபிடிக்கும்
என் ஊன்றுகோல்..
நான் உடுத்திருக்கும் ஆடையின் நிறம்
எல்லாம் காணவேண்டும்.

வானவில்லுக்கு நிறமுண்டாம்.
ஆமாம் நிறமென்பதென்ன ?
நிலவு போல பெண்ணாம்
சரி நிலவும்,பெண்ணும் என்ன நிறம்..?

எனக்கு முன்னால் இருப்பதெல்லாம்
எதிர்பார்ப்பு மூட்டைகள்.
மனசு முழுக்க ஆனந்தம் வந்து
ஊசிகுத்திய போது..
கனவு கலைத்தாள் அம்மா.

விடிந்து விட்டதாம்..
எனக்கு
அடக்கமுடியாமல் அழுகை வந்தது.

கனவு கண்டாயா
என்ற அம்மாவின் கேள்விக்கு
ஊன்றுகோல் தடவிய கரங்களுடன்
வார்த்தைகள் வலித்தன.
ஆமாம். ஆனால்.
கனவில் கூட கண் தெரியலேம்மா..

20 comments on “கவிதை : அறுவை சிகிச்சை

 1. அழகான கவிதை.

  நான் பார்வை பற்றியும், கண் தானம் பற்றியும் அடிக்கடி எண்ணமிடுவதுண்டு.கண்டிப்பாக கண் தானம் செய்யவேண்டும் என்று ஒவ்வொரு தடவையும் நினைத்து கொள்வேன்.

  இந்த கவிதை படித்தவுடன் எனக்கு அந்த நினைவுகள் தான் திரும்பவும் வந்தது.

  Like

 2. //ஆமாம். ஆனால்.
  கனவில் கூட கண் தெரியலேம்மா..//

  நான் பள்ளியில் படிக்கும்போது என்னுடன் படித்த ஒரு நண்பனுக்கு கண் தெரியாது,அவன் படும் கஷ்டங்களை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன் . இதை படித்ததும் அழுதுவிட்டேன் .

  Like

 3. நண்பர் சேவியருக்கு,

  ஜனத் தொகையில் நூறு கோடி தாண்டிய பின்னும் , இன்னமும் நம் நாட்டு பார்வை இழந்தவர்கள் ஒளி பெற இலங்கை மக்களின் உதவி தான் கை கொடுக்கிறது.
  இந்த கவிதை படித்த பிறகேனும் , கண் தானம் செய்ய நம்மவர்கள் முனைவார்கள் என்ற நம்பிக்கை வேர் தளிர்க்கிறது.
  சோக இழை பின்னிய கவிதை நல்ல விழிப்புணர்வு நம்மவர்களுக்கு தர வேண்டும் .
  சௌராஷ்ட்ரா சமூக மக்கள் கண் தானம் செய்வதில் சிறந்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது படித்த செய்தி .
  அந்த சமூகத்தவருக்கு , இந்த மறுமொழியின் வாயிலாக நன்றிகள் கூற விழைகிறேன் .

  வாழ்த்துக்கள் சேவியர் !!!!!!

  அன்புடன்
  குகன்

  Like

 4. //அழகான கவிதை.

  நான் பார்வை பற்றியும், கண் தானம் பற்றியும் அடிக்கடி எண்ணமிடுவதுண்டு.கண்டிப்பாக கண் தானம் செய்யவேண்டும் என்று ஒவ்வொரு தடவையும் நினைத்து கொள்வேன்.

  இந்த கவிதை படித்தவுடன் எனக்கு அந்த நினைவுகள் தான் திரும்பவும் வந்தது.
  //

  அன்பின் குந்தவை, உங்கள் மெல்லிய மனம் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. நன்றி வருகைக்கும், கருத்துக்கும்.

  Like

 5. //நான் பள்ளியில் படிக்கும்போது என்னுடன் படித்த ஒரு நண்பனுக்கு கண் தெரியாது,அவன் படும் கஷ்டங்களை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன் . இதை படித்ததும் அழுதுவிட்டேன் .//

  அன்பின் முகுந்தன், கண் தெரியா நிலை கற்பனை செய்யவே கடினமாய் இருக்கிறது. உங்கள் நண்பனின் நினைவுகளை கவிதையில் மீண்டெடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி. உங்கள் மனதுக்கு நன்றிகள்.

  Like

 6. //ஜனத் தொகையில் நூறு கோடி தாண்டிய பின்னும் , இன்னமும் நம் நாட்டு பார்வை இழந்தவர்கள் ஒளி பெற இலங்கை மக்களின் உதவி தான் கை கொடுக்கிறது.
  இந்த கவிதை படித்த பிறகேனும் , கண் தானம் செய்ய நம்மவர்கள் முனைவார்கள் என்ற நம்பிக்கை வேர் தளிர்க்கிறது.
  சோக இழை பின்னிய கவிதை நல்ல விழிப்புணர்வு நம்மவர்களுக்கு தர வேண்டும் .
  சௌராஷ்ட்ரா சமூக மக்கள் கண் தானம் செய்வதில் சிறந்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது படித்த செய்தி .
  அந்த சமூகத்தவருக்கு , இந்த மறுமொழியின் வாயிலாக நன்றிகள் கூற விழைகிறேன் //

  அன்பின் குகன், வழக்கம் போலவே வலிமையாய் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள், நன்றிகள் பல. உங்கள் பின்னூட்டம் பல புதிய செய்திகளை எனக்குக் கற்றுத் தருகிறது. நன்றி.

  Like

 7. //அடிக்கடி அழ வைப்பதே(உங்கள்)கவிதையின் வேலையாய் போச்சு.

  //

  அழுகை தருகிறது ஆனந்தம்.

  Like

 8. ஒரு முறை இரவுப் பணியின் போது எனது கண்ணாடி கீழே விழுந்து உடைந்துவிட்டது. அந்த இரவில் கண்ணாடி இல்லாமல் என்னால் வேலை செய்ய முடியவில்லை. கண்ணாடி இல்லாததற்கேஇந்தக் கஷ்டம் என்றால் பார்வையே இல்லாமல் கஷ்டப் படுகிறவர்களை நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.

  ஆந்திராவில் ஒரு நடைமுறை இருந்து வருகிறது. பார்வையற்றவர்கள் ப்ரெயிலி முறையில் பரிட்சை எழுதினால் திருத்துவதற்கு ஆள் கிடைப்பதில்லை. அதனால் வேறு ஒருவரைக் கொண்டு அவர்கள் சாதாரணமாகவே எழுதலாம்.

  இதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை ஊதியத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பி வைக்கின்றன. வரும் ஆண்டு முதல் ஆங்கிலம் மற்றும் ஆங்கில வழியில் எழுதக் கூடிய தேர்வுகளில் பார்வையற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. தங்களது பதிவு சரியான நேரத்தில் செய்யப்பட்ட நினைவூட்டல். நன்றி.

  Like

 9. விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. எனது தோழி ஒருத்தி அடிக்கடி சென்று தேர்வு எழுதி வருவார் பார்வையற்றவர்களுக்காக.

  “கண்தானம்” பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்… ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி… தேடிப் பிடித்து போடுகிறேன்.

  Like

 10. valaip pathivil yellam parthu paditha yenakku ennaikkuthan ethanaip

  padikka kan therinthathu sir

  kanavilum kan theriyala ma

  entha varthai nammavida avanga ammavirkku yeppadi valichi erukkum

  konnuttinga sir

  yevvalavu yeakkam sir antha sorkkalil erukku

  unarhiren sir mounamaha

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.