கவிதை : அவரவர் விருப்பம் அவரவர்க்கு

அது ஒரு மிக அழகான பூனைக்குட்டி.
உடல் முழுதும்
வெண்பஞ்சு ஒட்டிவைத்ததாய்,
வெல்வெட்டை வெட்டி வைத்ததாய்,
பாதரசப் பயணமாய் வழவழப்பு.

மெல்லிய மீசையை மெதுவாய் என்
முகத்தில் தேய்த்து விளையாடும்.
என் தோளுக்கும் காலுக்குமாய்
அவசரப் பாதங்களுடன்
மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ளும்.

கூரிய நகங்கள் அதற்கு.
ஆனால் ஒருமுறை கூட காயம் தந்ததில்லை,
உறைக்குள் சொருகப்பட்ட சிறுவாளாய்
விரல்களுக்குள் புதைந்து கொள்ளும் அவை.

தரையில் உணவுதந்தால் அடம்பிடிக்கும்,
பாத்திரத்தில் பரிமாறினால் மட்டுமே
முத்தமிட்டு ஒத்துக்கொள்ளும்.

என் படுக்கைக்குள் அவ்வப்போது
குறுகுறுக்கும்.
பாத்திரங்கள் கலைத்து பால் தேடும்,
என் தனிமைத் திண்ணையில் தலைகோதும்.

நான் வீடுதிரும்பும் வேளைகளில்
வாசலோரத்தில் வந்து சத்தமிடும்.
கால்களைச் சுற்றிச் சுற்றியே வட்டமிடும்..

என் உயிர்த் தோழனாய்..
அந்தச் சின்ன ஜீவன்.

இரண்டுநாளாய்
அதைக் காணவில்லை.
உயிரைத் தொலைத்ததாய் உள்ளுக்குள் வலித்தது.
கூரியதாய் ஏதோ ஒன்று
இதயத்தை குறுக்கும் நெடுக்குமாய் கூறுபோட்டது.

அலுவலகத்தில் வேலை நகரவேயில்லை.
சக நண்பன்.
சத்தமில்லாமல் சலித்துக் கொண்டான்
பூனைத்தொல்லை தாங்கமுடியவில்லை.
கண்காணாத தூரத்தில் விட்டுவிடவேண்டும்.

14 comments on “கவிதை : அவரவர் விருப்பம் அவரவர்க்கு

  1. தவிக்கின்றேன்

    மறந்துவிடு என்கிறாய்
    எதை மறப்பது
    எப்படி மறப்பதென்று தெரியாமல்
    தவிக்கின்றேன் நான்

    எழுத்தே வராத
    இந்த கைகளில்
    கவிதைகள் எழுத
    கற்றுக் கொடுத்ததே
    உன் கண்கள்
    அதை மறப்பதா …….

    சொல் அன்பே
    எதை மறப்பது
    எப்படி மறப்பது

    கல்லாய் இருந்த என்னை
    சிற்பமாய் செதுக்கினாய்
    உன் காதல் மொழிகளால்
    செதுக்கிய சிற்பத்தை
    நீயே உடைக்க நினைப்பது
    என்ன நியாயம் அன்பே

    உன்னை மறப்பதென்பது
    இயலாத ஒன்று
    மரிக்கின்றேன் உன்னையும்
    உன் காதலையும்
    சுமந்து கொண்டு
    மீண்டும் பிறப்பெடுப்பேன்
    உன்னை அடைவதற்கு
    இன்னொரு ஜென்மம்
    இருக்குமென்றால் ………
    nice……..

    Like

  2. //அது ஒரு மிக அழகான பூனைக்குட்டி.//

    அது= ஒன்று
    அவை=பல

    இப்படி எங்கோ படித்திருக்கிறேன். ‘ஒரு’ எனும் சொல்லை அகற்றி படித்துப் பார்க்கிறேன் இன்னும் சுவை கூடுகிறது… மன்னிக்கவும் அண்ண தெரிந்ததை சொன்னேன்…

    Like

  3. //அண்ணா வந்துவிட்டேன்.சுகம்தானே?
    மனிதரை விட மிருகங்களிடம் பாசம் வைப்பது மனதிற்கு இதம்//

    சுகம் சுகம்.. 🙂

    சந்தோஷமாக இருக்கிறது சகோதரி உங்களை மீண்டும் இங்கே காண்பதில் 😀

    Like

  4. அண்ணா வந்துவிட்டேன்.சுகம்தானே?
    மனிதரை விட மிருகங்களிடம் பாசம் வைப்பது மனதிற்கு இதம்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.