கவிதை : நீ எனது சுவர்க்கத்தின் முகவரி.

amritarao

 

 

 

 

 

பிரியமே,
நீ
சங்கீதம் கற்கிறாயாமே !
குயிலுக்கு எதுக்கடி
புல்லாங்குழல் பயிற்சி ?

 

 

0

 ஒரு
நாட்டிய மேடையின்
அத்தனை கொலுசுகளும்
சட்டென்று
மௌனமாயின,
என் மனசுக்குள்
நீ
சிரிக்கத் துவங்கிய வினாடியில்.

0

8_001

 

 

 

 

உன்
இயல்போடே காதலிக்கப்
பிடித்திருக்கிறது எனக்கு,
என்
இயல்பே
பிடிப்பதில்லை உனக்கு.

 

 

 

 
0

உன்னால்
தினம் தினம்
நிராகரிக்கப்பட்டும்
கடல் நீர் அள்ளிக் கண்ணீர் துடைக்கும்
பேதையாய்
உப்புக் கன்னங்களோடே
உலவுகின்றேன்.
0

aaaDSC_01428-_28_

 

 

 

 

 கிழித்தெறிவாய்
என்று தெரிந்தும்
தொடர்கின்றன என்
மனுத் தாக்கல்கள்,
உன்
விரல் தொடும் ஆசையில்

 

 

0

 

எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு ?

0

DSC_0324

 

 

 

 

உன்
வரைபடம் பார்த்துப் பார்த்தே
வயதாகிறது எனக்கு,
இன்னும்
நீ
பயணிக்கும் பாதை
புரியவே இல்லை.

 

 
0

 

நீ
பேசியதை விட
பேசுவாய் என்று
நினைத்தது தான் அதிகம்,
மிக மிக அதிகம்.
தொடாமலேயே
சிணுங்கும்
ஓர் தொட்டாச்சிணுங்கித்
தோட்டம் தானே நீ.
0

DSC_0028

 

 

 

 

இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார் ஒளி தந்தது ?

0

 உன்னை
எழுதுவதால் மட்டுமே
பிழையான என்
கவிதைகளும்
பிழைக்கின்றன.

 

தமிழிஷில் வாக்களிக்கலாமே…

41 மறுமொழிகள்

  1. Jayarathina Madharasan சொன்னது,

    ஜூலை 31, 2009 இல் 4:55 மு.பகல்

    //– கிழித்தெறிவாய்
    என்று தெரிந்தும்
    தொடர்கின்றன என்
    மனுத் தாக்கல்கள்,
    உன்
    விரல் தொடும் ஆசையில் –//

    Lovely…

  2. kalyanakamala சொன்னது,

    ஜூலை 31, 2009 இல் 5:48 பிற்பகல்

    //எதையாவது
    இழுத்துக் கொள்ளும்
    வரை தானே வெற்றிடம் ?,
    உன்னை
    இழுத்துக் கொண்டபின்
    இதயம் எப்படி
    வெற்றிடமானது எனக்கு //
    ஆஹா!சூப்பர் வரிகள்!
    கமலா

  3. vanniya சொன்னது,

    ஜூலை 31, 2009 இல் 11:22 பிற்பகல்

    உன்
    வரைபடம் பார்த்துப் பார்த்தே
    வயதாகிறது எனக்கு,
    இன்னும்
    நீ
    பயணிக்கும் பாதை
    புரியவே இல்லை.

    super lines

  4. vanniya சொன்னது,

    ஜூலை 31, 2009 இல் 11:50 பிற்பகல்

    உன்
    வரைபடம் பார்த்துப் பார்த்தே
    வயதாகிறது எனக்கு,
    இன்னும்
    நீ
    பயணிக்கும் பாதை
    புரியவே இல்லை.

    super lines

  5. bala சொன்னது,

    ஆகஸ்ட் 1, 2009 இல் 12:07 மு.பகல்

    பிரியமே,
    நீ
    சங்கீதம் கற்கிறாயாமே !
    குயிலுக்கு எதுக்கடி
    புல்லாங்குழல் பயிற்சி

    ஐயோ ஐயோ கொல்றீங்களே பாஸ்

    இருட்டுக்குள்
    ஒளிர்கிறீர்கள்
    நீயும்,
    உன் கை மெழுகுவர்த்தியும்.
    ஒரே ஒரு சந்தேகம்
    யாருக்கு
    யார் ஒளி தந்தது ?

    0

    ஐயோ ஐயோ கொல்றீங்களே பாஸ் (பெருக்கல் குறி ) ஆயிரம்

  6. kavikilavan சொன்னது,

    ஆகஸ்ட் 1, 2009 இல் 1:36 மு.பகல்

    கிரேட். வேறு என்ன சொல்ல

  7. Syed A.N. சொன்னது,

    ஆகஸ்ட் 1, 2009 இல் 1:50 மு.பகல்

    கிழித்தெறிவாய்
    என்று தெரிந்தும்
    தொடர்கின்றன என்
    மனுத் தாக்கல்கள்,
    உன்
    விரல் தொடும் ஆசையில்

    அருமை. ரசித்த வரிகள்

  8. ஹேமா சொன்னது,

    ஆகஸ்ட் 1, 2009 இல் 10:40 மு.பகல்

    அண்ணா,படங்கள் அழகு.கவிதை எப்பவும்போல நிறையவே அழகு.

  9. ஷாமா சொன்னது,

    ஆகஸ்ட் 1, 2009 இல் 10:03 பிற்பகல்

    //எதையாவது
    இழுத்துக் கொள்ளும்
    வரை தானே வெற்றிடம் ?,
    உன்னை
    இழுத்துக் கொண்டபின்
    இதயம் எப்படி
    வெற்றிடமானது எனக்கு ?//

    இது காதலால் மட்டுமே சாத்தியமாகிறது!!!…..
    ஆஹா… என்னே வரிகள்!…. அற்புதம் சேவியர்!!

  10. Vinitha சொன்னது,

    ஆகஸ்ட் 2, 2009 இல் 1:13 மு.பகல்

    Nice Poems! Happy Friendship Day!

  11. S.A. நவாஸுதீன் சொன்னது,

    ஆகஸ்ட் 2, 2009 இல் 1:46 மு.பகல்

    இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  12. vijaygopalswami சொன்னது,

    ஆகஸ்ட் 2, 2009 இல் 2:39 மு.பகல்

    கவிதை கவிதையாக எழுதி என் கொலைவெறியை மீண்டும் மீண்டும் தூண்டுகிற சேவியரை வன்மையாகக் கண்டிக்கிறேன்… ண்டிக்கிறேன்… டிக்கிறேன்… க்கிறேன்… கிறேன்… றேன்… ன்…

    சமீபத்திய கொலைவெறி

  13. சாய்கணேஷ் சொன்னது,

    ஆகஸ்ட் 2, 2009 இல் 3:35 மு.பகல்

    //எதையாவது
    இழுத்துக் கொள்ளும்
    வரை தானே வெற்றிடம் ?,
    உன்னை
    இழுத்துக் கொண்டபின்
    இதயம் எப்படி
    வெற்றிடமானது எனக்கு //
    ஆஹா!சூப்பர் வரிகள்!
    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

  14. vijaygopalswami சொன்னது,

    ஆகஸ்ட் 2, 2009 இல் 4:22 மு.பகல்

    சாயி… இங்கேர்ந்துதான் வந்தீங்களா…

  15. john சொன்னது,

    ஆகஸ்ட் 2, 2009 இல் 10:15 பிற்பகல்

    ha..ha…eppady ippadi allam yosikiringa

  16. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 3, 2009 இல் 3:42 மு.பகல்

    நன்றி ஜான் :) காதலாச்சே :)

  17. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 3, 2009 இல் 3:42 மு.பகல்

    //சாயி… இங்கேர்ந்துதான் வந்தீங்களா…

    //

    அப்படித் தான் போல :)

  18. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 3, 2009 இல் 3:42 மு.பகல்

    ////எதையாவது
    இழுத்துக் கொள்ளும்
    வரை தானே வெற்றிடம் ?,
    உன்னை
    இழுத்துக் கொண்டபின்
    இதயம் எப்படி
    வெற்றிடமானது எனக்கு //
    ஆஹா!சூப்பர் வரிகள்!
    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்//

    நன்றி சாய் கணேஷ் :)

  19. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 3, 2009 இல் 3:44 மு.பகல்

    //கவிதை கவிதையாக எழுதி என் கொலைவெறியை மீண்டும் மீண்டும் தூண்டுகிற சேவியரை வன்மையாகக் கண்டிக்கிறேன்… ண்டிக்கிறேன்… டிக்கிறேன்… க்கிறேன்… கிறேன்… றேன்… ன்…

    //

    இப்படிச் சொல்லிச் சொல்லி சூப்பர் கவிதைகளை எழுதும் உங்களை மனமார பாராட்டுகிறேன் :)
    இதுக்காகவே நாம அடிக்கடி எழுதணும்போலிருக்கேப்பா…

  20. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 3, 2009 இல் 3:44 மு.பகல்

    //இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//

    நன்றி நவாஸுதீன் :)

  21. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 3, 2009 இல் 3:45 மு.பகல்

    நன்றி வினிதா.. :)

  22. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 3, 2009 இல் 3:45 மு.பகல்

    ////எதையாவது
    இழுத்துக் கொள்ளும்
    வரை தானே வெற்றிடம் ?,
    உன்னை
    இழுத்துக் கொண்டபின்
    இதயம் எப்படி
    வெற்றிடமானது எனக்கு ?//

    இது காதலால் மட்டுமே சாத்தியமாகிறது!!!…..
    ஆஹா… என்னே வரிகள்!…. அற்புதம் சேவியர்!!
    //

    மிக்க நன்றி ஷாமா :)

  23. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 3, 2009 இல் 3:46 மு.பகல்

    //அண்ணா,படங்கள் அழகு.கவிதை எப்பவும்போல நிறையவே அழகு//

    நன்றி ஹேமா :)

  24. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 3, 2009 இல் 3:47 மு.பகல்

    //கிழித்தெறிவாய்
    என்று தெரிந்தும்
    தொடர்கின்றன என்
    மனுத் தாக்கல்கள்,
    உன்
    விரல் தொடும் ஆசையில்

    அருமை. ரசித்த வரிகள்
    //

    நன்றி சையத் :)

  25. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 3, 2009 இல் 3:49 மு.பகல்

    //கிரேட். வேறு என்ன சொல்ல//

    நன்றி கவி கிழவரே.. :)

  26. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 3, 2009 இல் 3:49 மு.பகல்

    //ஐயோ ஐயோ கொல்றீங்களே பாஸ் (பெருக்கல் குறி ) ஆயிரம்
    //

    நன்றி பாலா :)

  27. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 3, 2009 இல் 3:50 மு.பகல்

    //உன்
    வரைபடம் பார்த்துப் பார்த்தே
    வயதாகிறது எனக்கு,
    இன்னும்
    நீ
    பயணிக்கும் பாதை
    புரியவே இல்லை.

    super lines
    //

    மிக்க நன்றி வன்னியா :)

  28. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 3, 2009 இல் 3:50 மு.பகல்

    ////எதையாவது
    இழுத்துக் கொள்ளும்
    வரை தானே வெற்றிடம் ?,
    உன்னை
    இழுத்துக் கொண்டபின்
    இதயம் எப்படி
    வெற்றிடமானது எனக்கு //
    ஆஹா!சூப்பர் வரிகள்!
    கமலா//

    மிக்க நன்றிங்க :)

  29. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 3, 2009 இல் 3:50 மு.பகல்

    ////– கிழித்தெறிவாய்
    என்று தெரிந்தும்
    தொடர்கின்றன என்
    மனுத் தாக்கல்கள்,
    உன்
    விரல் தொடும் ஆசையில் –//

    Lovely…
    //

    நன்றி மாதரசன் :)

  30. Amjad சொன்னது,

    ஆகஸ்ட் 3, 2009 இல் 7:25 மு.பகல்

    “ஒரு
    நாட்டிய மேடையின்
    அத்தனை கொலுசுகளும்
    சட்டென்று
    மௌனமாயின,
    என் மனசுக்குள்
    நீ
    சிரிக்கத் துவங்கிய வினாடியில்”

    is something that I enjoyed a lot…

    Its absolutely heavenly…

    Thanks Anna….

  31. ஆகஸ்ட் 3, 2009 இல் 10:27 மு.பகல்

    உன்னை
    எழுதுவதால் மட்டுமே
    பிழையான என்
    கவிதைகளும்
    பிழைக்கின்றன.

    ///

    அழகு

  32. SHOBANA சொன்னது,

    ஆகஸ்ட் 11, 2009 இல் 11:51 பிற்பகல்

    wow great

  33. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 13, 2009 இல் 3:49 மு.பகல்

    //wow great//

    நன்றி ஷோபனா :)

  34. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 13, 2009 இல் 3:58 மு.பகல்

    //உன்னை
    எழுதுவதால் மட்டுமே
    பிழையான என்
    கவிதைகளும்
    பிழைக்கின்றன.

    ///

    அழகு
    //

    நன்றி பிரபு :)

  35. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 13, 2009 இல் 3:59 மு.பகல்

    //“ஒரு
    நாட்டிய மேடையின்
    அத்தனை கொலுசுகளும்
    சட்டென்று
    மௌனமாயின,
    என் மனசுக்குள்
    நீ
    சிரிக்கத் துவங்கிய வினாடியில்”

    is something that I enjoyed a lot…

    Its absolutely heavenly…

    Thanks Anna….
    //

    மிக்க நன்றி தம்பி :)

  36. ஆகஸ்ட் 14, 2009 இல் 12:09 மு.பகல்

    இருட்டுக்குள்
    ஒளிர்கிறீர்கள்
    நீயும்,
    உன் கை மெழுகுவர்த்தியும்.
    ஒரே ஒரு சந்தேகம்
    யாருக்கு
    யார் ஒளி தந்தது ?

    அழகு

  37. சாமி சொன்னது,

    ஆகஸ்ட் 31, 2009 இல் 5:32 மு.பகல்

    //கிழித்தெறிவாய்
    என்று தெரிந்தும்
    தொடர்கின்றன என்
    மனுத் தாக்கல்கள்,
    உன்
    விரல் தொடும் ஆசையில்//

    கவிதையும் அழகு, அதற்கான படமும் அழகு…

  38. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:18 பிற்பகல்

    //கவிதையும் அழகு, அதற்கான படமும் அழகு…//

    நன்றி சாமி :)

  39. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:39 பிற்பகல்

    //இருட்டுக்குள்
    ஒளிர்கிறீர்கள்
    நீயும்,
    உன் கை மெழுகுவர்த்தியும்.
    ஒரே ஒரு சந்தேகம்
    யாருக்கு
    யார் ஒளி தந்தது ?

    அழகு
    //

    மீண்டும் நன்றிகள் யாழ் :)

  40. vetri Tiruvannamalai சொன்னது,

    செப்டம்பர் 10, 2009 இல் 5:21 பிற்பகல்

    உன்னை
    எழுதுவதால் மட்டுமே
    பிழையான என்
    கவிதைகளும்
    பிழைக்கின்றன.

  41. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 10, 2009 இல் 8:44 பிற்பகல்

    நன்றி வெற்றி திருவண்ணாமலை.


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers