உன்னுடம்
பேசும்போதெல்லாம்
பார்க்கவேண்டும் என்று
தவறாமல் தோன்றும்.
ஆனால்
பார்க்கும் போதெல்லாம்
பேசத் தோன்றுவதில்லை.
0
என் வீட்டு
மீன் குஞ்சுகளுக்குக் கூட
இப்போதெல்லாம்
புன்னகைக்காமல்
தீனி தர இயல்வதில்லை.
நீ என்னை
நெஞ்சில் கொண்ட பின்.
0
உன்னை
அதிகமாய் நேசிக்க
நேரம் தேடுவதனாலேயே
என்னை
நேசிப்பதை
நிறுத்தி விட்டேன்.
0
மோகம்,
உடலின் செல்கள்
உறங்கும் வரை.
காதல்
உயிர்ப் பறவை
விழித்திருக்கும் வரை.
நாண்களை
நான்
இறுக்கமாய் பின்னியிருக்கிறேன்.
நீ
ஒவ்வோர் முறை
மோதும் போதும்
இசையைத் தான்
என்னுள்
இறக்கி வைக்கிறாய்.
0
துளைகள் இல்லா
புல்லாங்குழல்
போல,
காதல் இல்லா வாழ்க்கை !
காற்று இல்லா
புல்லாங்குழலாய்
நீ
இல்லாத நான்
0
எது இல்லாமலும்
என்னால்
இருக்க இயலும்,
நீ இருந்தால்
0
மலரும் போதும்
உதிரும் போதும்
சத்தம் போடுவதில்லை
ரோஜாப் பூக்கள்,
நம்
காதலைப் போல.
0
அடித்துக் கொண்டே இருக்கிறது
என் காதல் காற்று
நீயோ
அதன் முதல் முனை எங்கேயென்று
வினா தொடுக்கிறாய்.
எங்கே தேடுவேன்
வட்டத்தின் மூலையை ?
0
காதலுக்கு கண்ணில்லை
என்பதெல்லாம் பொய்,
உன்
கண்ணுக்குள் தான்
காதலில்லை
0
உன்
ஒவ்வோர் பார்வையும்
சாவியில்லா பூட்டொன்றை
எனக்குள்
பூட்டி நகர்கிறது.
எப்போது தான்
பூட்டு தயாரிப்பதை நிறுத்தி
சாவி தயாரிக்க சம்மதிப்பாயோ ?
0





saravanan சொன்னது,
ஆகஸ்ட் 5, 2009 இல் 1:12 மு.பகல்
Superb
vijaygopalswami சொன்னது,
ஆகஸ்ட் 5, 2009 இல் 1:33 மு.பகல்
தயாராகிட்டிருக்கு… அடுத்த கொலை வெறி…. பதிவு போட்டதும் பின்னூட்டம் போட்டுத் தெரிவிக்கிறேன்…
Jayarathina Madharasan சொன்னது,
ஆகஸ்ட் 5, 2009 இல் 5:28 மு.பகல்
சூப்பர்…
ambi சொன்னது,
ஆகஸ்ட் 5, 2009 இல் 6:05 மு.பகல்
hi boss pls send this to mail i dont know how to send this my mail id ambi1986@gmail.com
VIKNESHWARAN சொன்னது,
ஆகஸ்ட் 5, 2009 இல் 3:31 பிற்பகல்
அண்ணா அசத்துறிங்க போங்க…
படங்கள் ரொம்ப அம்சமா இருக்கு…
சிவா சொன்னது,
ஆகஸ்ட் 6, 2009 இல் 1:01 மு.பகல்
துளைகள் இல்லாத புல்லாங்குழல் ஏது
பூட்டும் சாவியுமாய் அசத்துகிறது
புகைப்படங்களும் கவிதைகளும்
ஹேமா சொன்னது,
ஆகஸ்ட் 6, 2009 இல் 10:07 பிற்பகல்
படங்களின் கண்களிலும் கவிதையிலும் காதல் கொட்டிக்கிடக்கு.
சி.கருணாகரசு சொன்னது,
ஆகஸ்ட் 7, 2009 இல் 10:07 பிற்பகல்
கவிதை மிக அழகாய் இருக்கிறது.வாழ்த்துக்கள்.
Amjad சொன்னது,
ஆகஸ்ட் 8, 2009 இல் 4:01 பிற்பகல்
“என் வீட்டு
மீன் குஞ்சுகளுக்குக் கூட
இப்போதெல்லாம்
புன்னகைக்காமல்
தீனி தர இயல்வதில்லை.
நீ என்னை
நெஞ்சில் கொண்ட பின்”
A new kind of approach….
Loving someone is a beautiful feeling…
Anna….Was ur one a love marriage ???….
ஷாமா சொன்னது,
ஆகஸ்ட் 9, 2009 இல் 1:13 மு.பகல்
//உன்
ஒவ்வோர் பார்வையும்
சாவியில்லா பூட்டொன்றை
எனக்குள்
பூட்டி நகர்கிறது…..//
உயிர் தந்து
உயிர் எடுக்கும்
காதல் கவிதைகள்!…
அருமை…!! அற்புதம்…!!!
Yalini சொன்னது,
ஆகஸ்ட் 9, 2009 இல் 2:46 மு.பகல்
//காதலுக்கு கண்ணில்லை
என்பதெல்லாம் பொய்,
உன்
கண்ணுக்குள் தான்
காதலில்லை//
வாவ் மிகவும் ரசித்தேன் இவ் வரிகளை, உங்கள் கவிதை அற்புதம்!
bharthi சொன்னது,
ஆகஸ்ட் 9, 2009 இல் 9:55 பிற்பகல்
very nice kavithai
yarl சொன்னது,
ஆகஸ்ட் 11, 2009 இல் 10:48 பிற்பகல்
உங்கள் கவுதைகளை என்னை சொர்க்க வைக்கிறது.
பாராட்டுக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை
Jawahar சொன்னது,
ஆகஸ்ட் 12, 2009 இல் 1:02 மு.பகல்
//காதலுக்கு கண்ணில்லை
என்பதெல்லாம் பொய்,
உன்
கண்ணுக்குள் தான்
காதலில்லை//
வைர வரிகள்!
http://kgjawarlal.wordpress.com
dhatchayani சொன்னது,
ஆகஸ்ட் 12, 2009 இல் 8:04 பிற்பகல்
VERY NICE
dhatchayani சொன்னது,
ஆகஸ்ட் 12, 2009 இல் 8:05 பிற்பகல்
VERI NICE.,
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:47 மு.பகல்
//VERI NICE.,//
நன்றி தட்சினி.
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:48 மு.பகல்
//வைர வரிகள்! //
நன்றி ஜவகர்
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:50 மு.பகல்
//உங்கள் கவுதைகளை என்னை சொர்க்க வைக்கிறது.
பாராட்டுக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை//
நன்றி நண்பரே
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:51 மு.பகல்
//very nice kavithai//
நன்றி பாரதி.
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:52 மு.பகல்
////காதலுக்கு கண்ணில்லை
என்பதெல்லாம் பொய்,
உன்
கண்ணுக்குள் தான்
காதலில்லை//
வாவ் மிகவும் ரசித்தேன் இவ் வரிகளை, உங்கள் கவிதை அற்புதம்!
//
நன்றி யாழினி
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:52 மு.பகல்
////உன்
ஒவ்வோர் பார்வையும்
சாவியில்லா பூட்டொன்றை
எனக்குள்
பூட்டி நகர்கிறது…..//
உயிர் தந்து
உயிர் எடுக்கும்
காதல் கவிதைகள்!…
அருமை…!! அற்புதம்…!!!
//
நன்றி ஷாமா..
உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன ?
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:53 மு.பகல்
//“என் வீட்டு
மீன் குஞ்சுகளுக்குக் கூட
இப்போதெல்லாம்
புன்னகைக்காமல்
தீனி தர இயல்வதில்லை.
நீ என்னை
நெஞ்சில் கொண்ட பின்”
A new kind of approach….
Loving someone is a beautiful feeling…
Anna….Was ur one a love marriage ???….
//
நன்றி தம்பி. திருமணம் காதல் திருமணமல்ல..
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:53 மு.பகல்
//கவிதை மிக அழகாய் இருக்கிறது.வாழ்த்துக்கள்.//
நன்றி கருணாகரசு.
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:54 மு.பகல்
//படங்களின் கண்களிலும் கவிதையிலும் காதல் கொட்டிக்கிடக்கு.//
நன்றி ஹேமா
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:54 மு.பகல்
//துளைகள் இல்லாத புல்லாங்குழல் ஏது
பூட்டும் சாவியுமாய் அசத்துகிறது
புகைப்படங்களும் கவிதைகளும்//
நன்றி சிவா
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:56 மு.பகல்
//படங்கள் ரொம்ப அம்சமா இருக்கு…//
அதானே பாத்தேன்
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:57 மு.பகல்
//சூப்பர்…//
நன்றி மாதரசன்
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:57 மு.பகல்
//தயாராகிட்டிருக்கு… அடுத்த கொலை வெறி…. பதிவு போட்டதும் பின்னூட்டம் போட்டுத் தெரிவிக்கிறேன்…
//
நல்லது
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:58 மு.பகல்
//Superb//
நன்றி சரவணன்
படிக்காதவன் சொன்னது,
ஆகஸ்ட் 14, 2009 இல் 8:12 பிற்பகல்
எல்லாம் நல்ல இருக்கு அண்ணா…உங்கள் அனுமதி இல்லாமல் நான் கொஞ்சம் சுட்டுட்டேன்…
uzhavan சொன்னது,
ஆகஸ்ட் 30, 2009 இல் 10:11 பிற்பகல்
கவிதைகளனைத்தும் அழகு
கவிநயா சொன்னது,
ஆகஸ்ட் 31, 2009 இல் 1:58 பிற்பகல்
ரொம்ப அழகா இருக்கு காதலின் கருவறை!
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 1, 2009 இல் 9:18 பிற்பகல்
//ரொம்ப அழகா இருக்கு காதலின் கருவறை//
ரொம்ப நன்றி கவிநயா
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 1, 2009 இல் 9:19 பிற்பகல்
/கவிதைகளனைத்தும் அழகு//
நன்றி உழவன்
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 1, 2009 இல் 9:37 பிற்பகல்
/எல்லாம் நல்ல இருக்கு அண்ணா…உங்கள் அனுமதி இல்லாமல் நான் கொஞ்சம் சுட்டுட்டேன்…//
அனுமதியோட எடுத்தா அதுக்குப் பேரு “சுடுதல்” இல்லையே
மகிழ்ச்சி
vetri சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 4:59 பிற்பகல்
very nise
vetri Tiruvannamalai சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 5:01 பிற்பகல்
suppppppppppppppppppppppper
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 8:44 பிற்பகல்
//suppppppppppppppppppppppper
//
மிக்க நன்றி வெற்றி.
யாழ்_அகத்தியன் சொன்னது,
அக்டோபர் 9, 2009 இல் 7:18 மு.பகல்
காதலுக்கு கண்ணில்லை
என்பதெல்லாம் பொய்,
உன்
கண்ணுக்குள் தான்
காதலில்லை
sweet
K.SIVA(Fr) சொன்னது,
அக்டோபர் 11, 2009 இல் 4:16 மு.பகல்
Knnin Yaadijilit Kaninthu, Velum Moolijinit Péci, Minung Kanavukal Thoonra, Vidivin Paathaiyai Niiddi, Soolum Vaarthaijin Vilimpil, Soorkkang Kandavar Poonru, Suddum Masavinil Thiipam,Sudarvid Detivathu Poonréé, Thoodanthu Ninaivinai Miiddi, Kulirvinaik Koodupathey Kaathal. “” KAATHAL”"++K.SIVA++(Fr)
vijaygopalswami சொன்னது,
அக்டோபர் 17, 2009 இல் 12:58 மு.பகல்
ஐய்யோ… ஃப்ரான்ஸ் சிவா… மறுபடியுமா… சரி இந்த முறையும் உங்க கவிதையை மொழி பெயர்க்கிறேன். இது ரெண்டாவது முறை. ஒரு முறைக்கு ஐந்து ஃப்ராங்க் வீதம் பத்து ஃப்ராங்க் என் அக்கவுண்ட்டுக்கு மாத்திவிடுங்களேன். புண்ணியமாப் போகும்…
ஃப்ரான்ஸ் சிவா கவிதை: கொஞ்சம் யாழினைக் கலந்து, வேலும் மொழியினைப் பேசி, மின்னும் கனவுகள் தோண்ற, விடிவின் பாதையை நாடி, சூழும் வார்த்தையின் விளிம்பில், சொர்கங் கண்டவர் போன்று, சூடும் மாசினில் தீபம், சுடரைத் தேடுதல் போன்றே, தொடர்ந்து நினைவினை மீறி, குளிர்வினைக் கூட்டுவதே காதல்.
ஸ்சப்பாஆஆஆ… முடியலடா சாமி…
சேவியர் சொன்னது,
அக்டோபர் 22, 2009 இல் 9:02 பிற்பகல்
//ஃப்ரான்ஸ் சிவா கவிதை: கொஞ்சம் யாழினைக் கலந்து, வேலும் மொழியினைப் பேசி, மின்னும் கனவுகள் தோண்ற, விடிவின் பாதையை நாடி, சூழும் வார்த்தையின் விளிம்பில், சொர்கங் கண்டவர் போன்று, சூடும் மாசினில் தீபம், சுடரைத் தேடுதல் போன்றே, தொடர்ந்து நினைவினை மீறி, குளிர்வினைக் கூட்டுவதே காதல்.
//
அட… இப்படியா சொல்லியிருக்காரு நண்பர் சிவா ?
சேவியர் சொன்னது,
அக்டோபர் 22, 2009 இல் 9:11 பிற்பகல்
வாங்க சிவா… நன்றிகள்.
சேவியர் சொன்னது,
அக்டோபர் 22, 2009 இல் 9:13 பிற்பகல்
//காதலுக்கு கண்ணில்லை
என்பதெல்லாம் பொய்,
உன்
கண்ணுக்குள் தான்
காதலில்லை
sweet
//
நன்றி யாழ்….
vijaygopalswami சொன்னது,
அக்டோபர் 23, 2009 இல் 5:35 மு.பகல்
//அட… இப்படியா சொல்லியிருக்காரு நண்பர் சிவா //
என்ன கொடுமை சார் இது… உயிரைக் குடுத்து மொழி பெயர்த்தவனப் பத்தி ஒரு வார்த்த கூட சொல்லல… :C
K.SIVA(Fr) சொன்னது,
அக்டோபர் 23, 2009 இல் 6:44 மு.பகல்
Enthali Avrkaijil Irukkaijiléé, EppadiYaan Piramuthuku Kaadduvééin, Anpudanéé EnnUravu AAkiyathaail, Nanrukavi Avruku Ninruthuthipaadum, Enpathanaail “” VIJAGOPAL SWAMI “” EnNarumai Uravenraal ééthirth Thuuviduvaa Raa? Yaanoruvan Thaniyaana AnnNan (Anna-Thampi)ThampiYattravn, AAthalinaal Utimaiyaaka Thampiyaakik, Ninrumanam Kulirkinréén, Thampiniir NiiduPallaandu Enrumanam, Ninru Pukal PaaduthThmpi. AAthalinaal Kuraijiruppin Maniththiduviiraka, Anpudané OliPéyappin OOsaiEnrum, NinruPukal Enmanthil IsaiyaakaOlikKum, Anpudanéé ThngkalPééyar EEnruMénManathi Olikkum, Nariyudun ThangkalLANPU Naadinirkkum, ++Iv Vann Nam:-K.SIVA ++ (Fr)
vijaygopalswami சொன்னது,
அக்டோபர் 24, 2009 இல் 8:27 பிற்பகல்
ஏந்திழை அவர்கையில் இருக்கையிலே, எப்படி நான் புறமுதுகு காட்டுவேன்… அன்புடனே என்னுறவு ஆகயத்தில், நன்று கவி அவருக்கு நின்று துதி பாடும் என்பதனால், விஜய்கோபால்சாமி, என்னருமை உறவென்றால் எதிர்த்திடுவாரா? யான் ஒருவன் தனியனா? அண்ணன் தம்பி அற்றவன, ஆதலினால் உரிமையாகத் தம்பியாகி நின்று மனம் குளிர்கின்றேன். தம்பி நீர் நீடு பல்லாண்டு என்றும், நின்று புகழ்பாடு தம்பி. ஆதலினால் குறை இருப்பின் மன்னித்திடுவீராக, அன்புடனே ஒலி பெயர்ப்பின் ஓசையென்றும், நின்று புகழ் என் மனதில் இசையாக ஒலிக்கும், அன்புடனே தங்கள் பெயர் என்றும் என் மனதில் ஒலிக்கும், நன்றியுடன் தங்களன்பு நாட்டினிற்கும். — கே. சிவா (ஃப்ரான்ஸ்)
அன்புத் தம்பி சிவா, இந்த ஒலிபெயர்ப்பு உதவி எப்போதும் தொடரும். அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்துட்டுப் போங்களேன். சேவியர் அண்ணன் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான். அவர மாதிரி சிறப்பா இல்லாட்டியும் கொஞ்சம் சுமாரா நானும் எழுதுவேன்.
அளவிலா அன்பிற்கு நன்றியுடன் – விஜய்கோபால்சாமி
சேவியர் சொன்னது,
அக்டோபர் 25, 2009 இல் 7:51 பிற்பகல்
/அன்புத் தம்பி சிவா, இந்த ஒலிபெயர்ப்பு உதவி எப்போதும் தொடரும். அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்துட்டுப் போங்களேன். சேவியர் அண்ணன் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான். அவர மாதிரி சிறப்பா இல்லாட்டியும் கொஞ்சம் சுமாரா நானும் எழுதுவேன். அளவிலா அன்பிற்கு நன்றியுடன் – விஜய்கோபால்சாமி
//
இந்த பெயர்ப்பு டெக்னிக்கை எனக்கும் சொல்லிக் கொடுங்களேன். தலை சுத்துது ….
சிவா…. வாசி வாசி.. ன்னு சொல்ல வைக்கிறாரு… ( நன்றி டூயட்
சேவியர் சொன்னது,
அக்டோபர் 25, 2009 இல் 7:54 பிற்பகல்
/என்ன கொடுமை சார் இது… உயிரைக் குடுத்து மொழி பெயர்த்தவனப் பத்தி ஒரு வார்த்த கூட சொல்லல… :C//
உங்களைப் பற்றி இனிமே நான் சொல்லித் தான் தெரியணுமா என்ன ?
arul jothi சொன்னது,
நவம்பர் 27, 2009 இல் 9:42 மு.பகல்
மலரும் போதும்
உதிரும் போதும்
சத்தம் போடுவதில்லை
ரோஜாப் பூக்கள்,
நம்
காதலைப் போல.
all the kavitahi r so nice speciaaly this one very nice keep going
சேவியர் சொன்னது,
December 4, 2009 இல் 12:22 மு.பகல்
//மலரும் போதும்
உதிரும் போதும்
சத்தம் போடுவதில்லை
ரோஜாப் பூக்கள்,
நம்
காதலைப் போல.
all the kavitahi r so nice speciaaly this one very nice keep going/
நன்றி அருள் ஜோதி…
K.SIVA(Fr) சொன்னது,
பெப்ரவரி 20, 2010 இல் 7:38 மு.பகல்
AnpuDanéé AlakuThaTum ThamiLil,EnNarumi Thampi Ya(A)thu, Vannak KaniThamilai SuvaikKa, SiRu Néé Ram PooThaaThu(U) Thaa(AA)Thu-AaKai Jinaal,SatRu MaranThu ThuJil KoolVathu Pool, EéNai MaRanthu ThuJil- AaNathuPool,IrunThu Pin IKkaviThai UuDaaka,EénUlLathThil UrainThidDa, AnpuThaRum ThampiyaTaam Vijaya gopal swami AvarKaLUdan PanPudaNéé, EénaithThngaLudan InaiTh Thidda ThamPién Sevayar AvarKadKum InpuDanéé, InRuMuthal ThooDarnThu Kavi, YaaTh ThiduVéén éN NanRi YUdan.++ INRUMUTHAL YAATHTHIDU VééN ++ -K.SIVA (Fr)-